பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2014

1.5 வயது தங்கையுடன் 68 மைல்கள் காரை ஓட்டிச் சென்ற 10 வயது நார்வே சிறுவன்

நார்வேயில் 10 வயது சிறுவன் ஒருவன் நேற்று காலை 6 மணிக்கு தனது பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு தெரியாமல் தனது 1.5 வயது தங்கையையும்
அழைத்துக்கொண்டு காரில் சுமார் 68 மைல்கள் பனிபடர்ந்த சாலையில் எவ்வித விபத்தையும் ஏற்படுத்தாமல் ஓட்டி சென்றுள்ளான்.
அந்த சிறுவனின் பெற்றோர் தூங்கி எழுந்ததும் தனது குழந்தைகளையும் காரையும் காணாதது குறித்து அதிர்ச்சியடைந்து, தனது குழந்தைகளை யாரோ தங்களது காரிலேயே கடத்தி சென்றுவிட்டதாக எண்ணியுள்ளார்கள். உடனே காவல்துறையினர்களிடம் புகார் செய்துள்ளனர்.
போலீஸாரின் தீவிர வேட்டையில் சிக்கிய அந்த சிறுவன், போலீஸார் விசாரணை செய்தபோது, தான் பிறவியிலேயே குள்ளமாக பிறந்தவர் என்றும், தனக்கு வயது 22 என்றும், தனது டிரைவிங் லைசென்ஸை வீட்டில் மறந்து வைத்துவிட்டதாகவும் கூறியுள்ளான். போலீஸார் அவன் சொல்வதை பொய் என்று அறிந்திருந்தாலும், அவன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு பின்னர் பத்திரமாக பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.