பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2014

அரசியல் புகலிடம்கோரி ஜெனீவாவில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்

200 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் பாதுகாப்பாக ஜெனீவாவில் இறங்கினர்
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் இருந்து ரோமாபுரிக்கு பறந்து கொண்டியிருந்த எத்தியோப்பிய விமானமொன்று கடத்தப்பட்டு
பலவந்தமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விமான நிலையத்தில் இறக்கப் பட்டதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்து ள்ளது. பிரதம விமானி கழிவறைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் உதவி விமானி, விமானிகள் அறையைப் பூட்டிவிட்டு தான் விமானத்தைக் கடத்துவதாக
ஜெனீவா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்தார். சுவிற்சர்லாந்தில் அரசியல் புகலிடம் வழங்கவேண்டும் என்ற அவரது கோரிக்கையை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பரிசீலனை செய்வதாக அறிவித்ததையடுத்து விமானத்தைக் கடத்திய அந்த விமானி அதனை பாதுகாப்பாக ஜெனீவா விமான நிலையத்தில் இறக்கினார்.
அவரை கைது செய்த பொலிஸார் இப்போது விசாரணைகளைச் செய்து வருகின்றனர். இவ்விமானத்தில் இருந்த சகல பயணிகளும் விமான ஓட்டிகள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த கடத்தல் முயற்சியின் போது எவரும் காயமடையவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஜி.எம்.ரி.நேரப்படி இரவு 9.30 அடிஸபாபாவில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க இருந்த 702 விமானம் ரோமாபுரியில் அதிகாலை 4.40மணிக்கு போய்ச் சேர இருந்தது. இந்த கடத்தலை அடுத்து மூடப்பட்டிருந்த ஜெனீவா விமான நிலையம் இப்போது திறக்கப்பட்டுள்ளது.
ஜி.எம்.ரி.நேரப்படி 7.15இற்கு ஜெனீவாவில் இருந்து புறப்பட இருப்பதாகவும் ஜி.எம்.ரி.நேரப்படி 7.45 இற்கு விமானங்கள் அங்கு வந்து இறங்குவதற்கான வசதிகள் செய்து கொடுத்திருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விமானம் சூடான் மீது பறந்து கொண்டிருந்த போதே இந்த மனிதன் விமானத்தை கடத்தியிருக்கிறான். விமானத்தில் எல்லாமாக 200 பயணிகளும் விமான ஓட்டிகளும் ஏனைய ஊழியர்களும் இருந்தனர்.