பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2014


ரஜனி சுப்ரமணியம் நாடு கடத்தல் தொடர்பில் ராதிகா பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்
2008 இல் கனடாவில் அகதியாக விண்ணப்பம் கோரிய 39 வயதான ரஜினி சுப்ரமணியம் அவருடைய அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டதோடு கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே.
இது தொடர்பில் கனடா ஸ்கார்பரோ தொகுதி எம்.பி ராதிகா சிற்பசேன் நாடாளுமன்றத்தில் பேசிய போது
கனடிய அரசாங்கத்தின் கொள்கையால் குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறியதோடு,
டொராண்டோவைச் சேர்ந்த ரஜினி சுப்ரமணியம் என்ற இளவயது தாய் கருணை மனு விண்ணப்பித்திருந்தும் நாடுகடத்தப்பட்டார் .
இவர் தனது 4 மற்றும் 5 வயது குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டார். தற்பொழுது இவரது கணவர் இக்குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக தனது வேலையை தியாகம் செய்துள்ளார்.
இப்படி குடும்பங்களை பிரிக்கும் பொறுப்பற்ற கொள்கைகள் கனடிய அரசாங்கத்திற்கு தேவை தானா என கேள்வி எழுப்பியுள்ளார்.