பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2014

நைஜீரியா நாட்டில் பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 29 பேர் பலியாகியுள்ளனர்.
யோப் மாகாணம் புனி யாடி என்னுமிடத்தில் உள்ள அரசுப் பள்ளி விடுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதிகாலை 2 மணி அளவில் விடுதியில் மாணவர்கள் தூங்கிக்
கொண்டிருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 29 பேர் பலியானார்கள். இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த யோப் மாகாண காவல்துறைத் தலைவர் சனூஸி ருஃபாய், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் அனைவரும் மாணவர்களா? என்பதை உடனடியாக உறுதி செய்ய இயலவில்லை என்றார்.
இதேபகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 மாணவர்கள் பலியாகினர். எனவே செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ள தாக்குதலுக்கும் அவர்களே காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.