பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2014

அக்டோபர் மாதம் சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் 

கோயம்பேடு அசோக்நகர் இடையே சோதனை ரெயில் ஓட்டம் இன்று 2–வது நாளாக  நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரெயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது. இன்று நடந்த சோதனை ஓட்டத்தில் மெட்ரோ

ரெயில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுயதாவது:  கோயம்பேடு ரயில் நிலையத்தில் இருந்து அசோக் நகர் ரயில் நிலையம் வரை 5 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. அசோக் நகர் செல்ல ஒரு மணி நேரம் ஆனது. திரும்பி வரும்போது 25 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டதால் 20 நிமிடத்திலேயே ரயில் சேர்ந்தது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. மற்ற மெட்ரோ ரயில்களுக்கும் சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

அப்போது, அதிகபட்சம் 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு மேலே உயர்மட்ட (பறக்கும்) மெட்ரோ ரயில் பாதை 175 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுவிட்டது. இதில் தண்டவாளம் அமைக்கும் பணி சில நாட்களில் தொடங்கும். ஓரிரு மாதத்தில் ஆலந்தூர் வரை சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றனர். மேலும் வரும் அக்டோபர் மாதம் சென்னை கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.