பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

திருப்பத்தூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண்ணை தீ வைத்து எரித்த கணவன்
நாட்டறம்பள்ளி அடுத்த குரும்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). லாரி டிரைவர் இவர் திருப்பத்தூர் அடுத்த மேல் கத்தியனூரை சேர்ந்த பிரியா (வயது 18) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.



கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பிரியாவை திருமணம் செய்து கொண்டார். தம்பதிகள் பிரியாவின் தாய் வீடான மேல் கத்தியனூரில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சுரேஷ் குடிபழக்கத்துக்கு அடிமையானார். மேலும் பிரியாவின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதனால் குடிபோதையில் அடிக்கடி பிரியாவுடன் தகராறு செய்து அடித்து உதைத்தார்.
நேற்று குடிபோதையில் சுரேஷ் வீட்டிற்கு வந்தார். அப்போது பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வழக்கம் போல் சுரேஷ் தகராறில் ஈடுபட்டார். கடும் வாக்குவாதத்திற்கு பிறகு அங்கு இருந்து மண்ணெண் ணையை பிரியாவின் மீது ஊற்றி தீ வைத்தார்.
தீ காயத்தால் பிரியா அலறி துடித்தார். உடனே சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்ததனர். தீக்காயத்தால் துடித்த பிரியாவை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரியா தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருப்பத்தூர் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.