பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2014

3 மாநில காங்கிரஸ் தலைவர்கள்  மாற்றம்: சோனியாகாந்தி நடவடிக்கை

பாராளுமன்ற தேர்தலையொட்டி மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியாகாந்தி திட்டமிட்டு உள்லார். இதை தொடர்ந்து மாநில அளவில் புதிய காங்கிரஸ் தலைவ்ர்களை நியமித்து வருகிறார். 


முதல்கட்டமாக  மேற்கு வங்காளம், அரியானா, கேரளா ஆகிய 3 மாநில காங்கிரஸ் தலைவர்களை பதவியில் இருந்து நீக்கி உள்ளார். அவர்களுக்கு பதிலாக  புதிய தலைவர்களை நியமித்து உள்ளார்.
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக சுதீர் ரஞ்சன் சவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா மாநில காங்கிரஸ் தலைவராக அசோக் தன்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்துக்கு வி.எம்.சுதீரனை தலைவராக நியமனம் செய்து உள்ளார்.