பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2014

லாரி கவிழ்ந்து விபத்து! 7 குழந்தைகள் பலி! 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
கர்நாடக மாநிலம் ஹுப்ளி அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்டோரில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயம்
அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், ஹுப்ளி அருகே உள்ள தர்காவுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 
விதிமுறைகளை மீறி லாரியில் அதிக நபர்களை ஏற்றிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.