பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2014

 யாழில் காசோலை மோசடி அதிகரிப்பு; கடந்தவாரத்தில் மட்டும் 44 இலட்சம் ரூபா மோசடி 
யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரம் களவு, காசோலை மோசடி போன்ற 16 சம்பவங்களில் 99 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 


யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் டவுள்யூ. பி.விமலசேன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட 2 சம்பவங்களுடன் தொடர்புடையவர்களையே இதுவரை கைது செய்துள்ளோம்.

மேலும் 97 இலட்சத்து 31 ஆயிரத்திற்கு அதிகமாக மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புலானாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் நீதிமன்றிற்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன் கடந்த வாரத்தில் மட்டும் காசோலை மோசடி தொடர்பாக 6 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் 44 இலட்சத்து 51 ஆயிரத்து 305 ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

எனினும் காசோலை மோசடியானது வியாபார நோக்கிலேயே அதிகளவில் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றது.

மேலும் வீடு மற்றும் கடை உடைத்துக் கொள்ளை, களவு போன்ற 10 சம்பவங்கள் ஊடாக 55 இலட்சத்திற்கு மேற்பட்ட பணம், தங்க நகைகள் என்பனவும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது என்றார்.