பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2014

புத்தூரில் கார்–லாரி மோதல்: திருத்தணியை சேர்ந்த 4 பேர் பலி


ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா மல்லவரம் கிராமத்தை சேர்ந்த மணமகள் லீலாவதி குடும்பத்தினர். 25 பேர் நேற்று இரவு மினிலாரியில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இன்று நடைபெறும்
திருமணத்திற்கு வந்தனர்.
இதேபோல் திருத்தணி பாலாஜி நகரை சேர்ந்த ரகுபதி நாயுடு (வயது 53) தன்னுடைய மகள் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக மகன் சூர்யா (வயது 25) நண்பர்கள் மேகவர்ணம் (40), மோகன்பாபு (45) ஆகியோருடன் காரில் திருப்பதி நோக்கி சென்றார்.
புத்தூர் அடுத்த தனுக்கு ரெயில் நிலையம் அருகே வந்தபோது காரும்–லாரியும் பயங்கரமாக மோதியது.
இதில் கார் லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கியது. காரில் பயணம் செய்த ரகுபதி நாயுடு, சூர்யா, மேகவர்ணம், மோகன்பாபு ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
லாரியில் வந்த திருமண கோஷ்டியினர் 23 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.