பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2014


7 பேர் விடுதலைக்கு எதிராக  3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சத்தியாகிரக போராட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற முருகன்,சாந்தன், பேரரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்தது.


இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்திலும் இப்பிரச்சினை காரணமாக காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
குழித்துறை நகரசபை அலுவலகம் முன்பு இன்று மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஆஸ்கார் பிரடி தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
இதில் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, ஜான் ஜேக்கப் மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ரமேஸ் குமார், ராஜேஸ்குமார், குமார், வட்டார தலைவர்கள் ஜோதீஸ் குமார், பால்ராஜ், நிர்வாகிகள் சேம் கிறிஸ்து குமார், மோகன்தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 தண்டனை அடைந்தவர்களை விடுவிக்க கூடாது என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.