பக்கங்கள்

பக்கங்கள்

22 பிப்., 2014


7 பேரின் விடுதலை அறிவிப்பின் எதிரொலி: டெல்லியில் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை நேற்று சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.
மேலும், தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.
இதற்கு எதிர்ர்பு தெரிவித்து டெல்லியில் டெல்லி- தமிழ்நாடு இல்லத்தை நோக்கி 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட சென்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி பொலிஸார் கைது செய்தனர். அதன் அருகிலேயே சில காங்கிரசார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உருவபொம்மையை எரித்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு பற்றி டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இது நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் இது போன்றவர்களை விடுதலை செய்தால், தவறான தகவலை அனுப்புவதாக அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.