பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2014

சிராணிக்கு எதிரான வழக்கு விசாரணை: இன்று தீர்ப்பு

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா வுக்கு எதிரான ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டை விசாரிப்பதற் காகப் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 78 (ஏ) இன் கீழ் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்
தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென முன்னாள் மேன்முறையீட்டு
நீதிமன்றத் தலைவர் கே. ஸ்ரீஸ்கந்தராஜா வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர் பான தீர்ப்பு இன்று (20/2) வழங்கப்படும்.
உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ஸலீம் மர்சூப், சந்திரா ஏக்கநாயக்க, சத்ய ஹெட்டகே, ஈவா வனசுந்தர, ரோஹினி மாரசிங்க ஆகிய ஐவர் கொண்ட குழு முன்னிலையில் மனு விசாரிக்கப்பட்டது.
தெரிவுக்குழுவுக்கு முறையான அதிகாரம் இன்மையால், அதன் மூலம் பெற்ற தீர்ப்பும், தீர்மானமும் அதிகாரம் அற்றதாக்கப்பட வேண்டுமென சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்.