பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2014


7 பேர்  விடுதலையை கண்டித்துஇளைஞர் காங்கிரசார் உண்ணாவிரதம்
 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இதையடுத்து குற்றவாளிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.


இந்த நிலையில் குற்ற வாளிகள் யாரையும் விடுதலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும், ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த 15 தமிழர்களுக்கும் நீதி கேட்டும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் நடந்தது.

அண்ணாசாலை மின்சார வாரியம் பின்புறம் உள்ள சாலையில் உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரத பந்தலை சுற்றியும் ராஜீவ்காந்தி மார்பில் சிறுபிள்ளையாக ராகுல்காந்தி சாய்ந்து இருக்கும் காட்சி, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்த காட்சிகள் பேனர்களாக வைக்கப்பட்டு இருந்தன.
உண்ணாவிரதத்துக்கு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாசே ராஜேஷ் ஏற்பாடு செய்து தலைமை தாங்கினார்.