பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2014


7 பேரை விடுதலை செய்வது இறையாண்மைக்கு எதிரானது: சுதர்சன நாச்சியப்பன்

மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.   அப்போது அவர்,   ‘’காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி பிரதமர் ஆக இருந்தபோது மட்டுமல்ல, தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள சோனியா காந்தியும் தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும்
எண்ணற்ற உதவிகளை திட்டங்களை செய்து வருகிறார்.


இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு தமிழை ஆட்சி மொழியாக்கியவர் ராஜீவ்காந்தி என்பதை யாரும் மறுக்க முடியாது.
தமிழருக்காக உணர்வுப்பூர்வமாக குரல் கொடுப்பது காங்கிரஸ் மட்டுமே. மற்ற தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுப்பதோடு சரி, வேறு எதுவும் செய்ததில்லை.
ராஜீவ் காந்தியின் கொலை சம்பவம் தமிழகத்தில் நடந்தது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழிவு. இச்சம் பவத்தில் வெளிநாட்டினர் செய்த சதி செயலுக்கு துணையாக செயல்பட்டவர்களுக்குத் தான் நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
இது இந்திய இறையாண்மையை காப்பதாகும். அதே நேரம் அவர்களை விடு தலை செய்யக் கோருவது இந்திய இறையாண்மைக்கு எதிரான தாகும். 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத் திருப்பது சரியல்ல’’என்று தெரிவித்தார்.