பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2014

தென் - மேல்  மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் மும்முரம்
தென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் 9 அரசியல் கட்சிகளும், 13 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, மக்கள் நல முன்னணி ஆகியன தமது வேட்பு மனுக்களை கையளித்ததாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்காக 8 அரசியல் கட்சிகளும், 5 சுயேட்சைக் குழுக்களும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
களுத்துறை மாவட்டத்தில் 7 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை வழங்கியதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 4 கட்சிகளும், 2 குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேவேளை, சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று மதியத்துடன் நிறைவடைந்தது. இதன்படி, 49 சுயேட்சை குழுக்கள் இரண்டு மாகாண சபைகளிலும் தமது கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளன.
எனினும், வேட்பு மனுத்தாக்கல்கள் நாளை நிறைவுறுத்தப்படவுள்ளன.