பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

தலதா மாளிகையின் புனித தாதுவை சுமந்து சென்ற “ராஜா" உயிரிழந்தது
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவில் பதினைந்து வருடங்களாக புனித தந்த தாதுவை தாங்கி சென்ற வேவலதெனிய ராஜா யானை நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்துள்ளது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவுக்கு மிகப்பெரிய சேவை செய்த வேவலதெனிய மஹிந்தோதய விகாரைக்கு சொந்தமான ராஜா யானை இறக்கும் போது அதற்கு வயது 55 ஆகும்.
இது குறித்து மேற்படி விகாரையின் நிர்வாக குழு தலைவரான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,
உயிரிழந்த ராஜா யானை தென் மாகாணத்தின் அகுனுகொலபெலஸ் பிரதேசத்தில் பிடிக்கப்பட்டு 1976ஆம் ஆண்டு அப்போதைய உல்லாசப் பிரயாணத்துறை அமைச்சராக இருந்த பீ.பீ.ஜீ.களுகல்லவின் ஊடாக வேவலதெனிய விகாரைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
மேற்படி ராஜா யானை கேகாலை பொஸன் மகா பெரஹெர, கண்டி ஸ்ரீ தலதா மகா பெரஹெர, கங்காராம, பெல்லன்வில, களனி, ,ரத்தினபுரி மகா சமன் தேவாலயம், கதிர்காமம், தெஹியோவிட்ட, ரம்புக்கன, மாவனல்ல, ஹெம்மாத்தகம போன்ற மகா பெரஹெரவில் புனித சின்னத்தை தாங்கி சென்ற பிரதான ராஜா யானை இதுவாகும்.
கடந்த சில காலங்களாக வேவலதெனிய ராஜா யானை நோய்வாய்பட்ட நிலையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சொந்தமான பல்லேகல பௌத்த விகாரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளது.
மேற்படி ராஜா யானை மறைவு கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உட்பட நாட்டின் பல்வேறு பௌத்த ஆலயங்களுக்கு பெரும் பேரிழப்பாகும் என்று மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
உயிரிழந்த ராஜா யானை இன்று பல்லேகல பௌத்த விகாரையில் அடக்கம் செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த யானையை பாராளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத், வேவலதெனிய மஹிந்தோதய விகாரையின் பிரதம குரு, ஹெம்மாத்தகம ஸ்ரீ சிந்தார்த்த நாஹிமி உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
- See more at: http://direct.tamilwin.com/show-RUmsyCSVLUmo2.html#sthash.iOc4GOro.dpuf