பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2014

தமிழக முதல்வரை மண்டியிட்டு கும்பிடும் மகிந்த
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அதிகாரத்தில் மிரட்ட அவரை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மண்டியிட்டு கும்பிடுவது போன்ற பதாகையை அதிமுகவினர் காட்சிக்கு வைத்துள்ளனர்.
தமிழகத்தின் கோவை நகரில் 10 இடங்களில் அதிமுக இளைஞர் அணியினரால் இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா அதிகாரத் தொனியில் ஒற்றை விரலை காட்டுகிறார். ஜெயலலிதா சொல்வதை அடக்க ஒடுக்கமாக கேட்பது போன்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா உட்பட 3 நாட்டு தலைவர்கள் பவ்யமாக தலை குனிந்து நிற்கின்றனர்.
அதேவேளை இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சவோ மண்டி இட்டு ஜெயலலிதாவை கும்பிடுவது போல் உள்ளது.