காயம் காரணமாக ஆசிய கிண்ண தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார்.அவருக்கு பதிலாக விராட் கோஹ்லி தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள, ஆசிய கோப்பை கிரிக்கெட்
தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயம் காரணமாக டோனி தொடரிலிருந்து விலகியுள்ளார். அணியின்
தலைமைப் பொறுப்பை கோஹ்லி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோனிக்கு
பதிலாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
|