பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2014


தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி : மத்திய அமைச்சரவை முடிவு

தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று ராஜினாமா செய்ததுடன் ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும என்று கவர்னருக்கு கடிதம் எழுதினர். இதற்கு மறுத்துவிட்ட கவர்னர் நஜீப் ஜங் தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்தார்.
இதனயைடுத்து தில்லி அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தில் இன்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்த கவர்னரின் பரிந்துரை ஆலாசிக்கப்பட்டது. பின்னர் தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. விரைவில் குடியரத்தலைவர் ஆட்சி தில்லியில் அமலுக்கு வருகிறது..