பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

போர்க்குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும்!– ஐரோப்பிய ஒன்றியம்
போர்க்குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.பிரசல்சில் இன்று நடைபெற்ற ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் இந்த்த் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் சில விடயங்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதற்கு ஆதரவளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மனித உரிமை மேம்பாட்டுக்கு ஆதவரளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் செயற்படும் என அறிவித்துள்ளது.
பாரியளவிலான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடாகும் என தெரிவித்துள்ளது.