பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2014


மக்களவையில் தாக்குதல் : எம்.பி.,க்களுக்கு சிகிச்சை
மக்களவையில்  எம்.பிக்கள் மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தினார் எம்.பி. .  மிளகுப்பொடி ஸ்பிரேயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று சுஷில் குமார் ஷிண்டே தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்து கொண்டிருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி. ராஜ்கோபால் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடி ஸ்பிரேயை எம்.பி.க்கள் மீது தெளித்து தாக்கினார்.
இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. மிளகு பொடி பரவியதால் அங்கிருந்த எம்.பி.க்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. உடனே பாராளுமன்ற மருத்துவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் எம்.பி.க்களுக்கு சிகிச்சை அளித்தனர். 3 எம்.பி.க்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிக்கின்றன.
எம்.பி. ராஜ்கோபால் சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப் பிடத்தக்கது.