பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2014

மாளிகாவத்தை பதூர் என்ற பாதாள உலகத் தலைவர் கைது
பொலிஸாரின துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பிரபல பாதாள உலகத் தலைவர் மாமா அஸ்மியின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான மாளிகாவத்தை பதூர் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாளிகாவத்தை பிரதேசத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை ஒன்றின் போது இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபரிமிருந்து கிரேனட் ரக கைக் குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளில் அவர் தொடர்பினை பேணி வந்ததாக கூறப்படும் பெண்ணொருவரின் வீட்டிலிருந்து 0.38 ரக ரிவோல்வர் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.