பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2014

தமிழ்ப் பொலிஸ் உத்தியோகஸ்தர் விபத்தில் பலி 
யாழ். தீவகம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார்.
 
யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய குகராஜ் பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஊர்காவற்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நாரந்தனை வடக்குப் பகுதியில் அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.