பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2014


ராகுல் காந்தியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு: கட்சியை இணைப்பது தொடர்பாக ஆலோசனை
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியை, திங்கள்கிழமை காலை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார். 
தனி தெலங்கானா கொண்டு வந்தால், தனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக சந்திரசேகர ராவ் கூறியிருந்தார். இதனையொட்டி சோனியா, ராகுலுடன் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியாவை நேற்று சந்தித்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலம் உருவானதற்கு நன்றி தெரிவித்ததாகவும், அரசியல் குறித்த எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்,