பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2014

தமிழகத்தில் ஏப்ரல், மே’ யில் மக்களவைத் தேர்தல்!
 தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  தலைமைத் தேர்தல் அதிகாரி
பிரவீண்குமார் உள்பட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வாய்ப்பு  உள்ளதாக தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்துவது பற்றியும் பரிசீலனை செய்துள்ளதாகவும் சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தகவல் தெரிவித்தார்.
ஆந்திரா,சிக்கிம்,ஒடிசா மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். டெல்லியில் நாளை அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம்  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.