பக்கங்கள்

பக்கங்கள்

24 பிப்., 2014


நீர்கொழும்பு கொள்ளைச் சம்பவம்:

கைதான ஐ.தே.க வேட்பாளர் ரொயிஸ் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு

* நீண்டகால கொள்ளை குற்றச்சாட்டு தொடர்பிலான ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது
* பணமோசடி, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்களின் பிரதான சந்தேகநபர்
* இவருக்கு எதிராக நீதிமன்றில் 4 வழக்குகள்
* சி.சி.ரீ.வி. கமராக்கள் மூலமே சந்தேக நபர்கள் மூவர் கைது



நீர்கொழும்பு பண பரிமாற்ற நிலைய கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரொயிஸ் பெர்னாண்டோ நீண்டகாலமாக பாரிய கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் பண மோசடி சம்பவங்களுடன் தொடர்புடையவ ரென்பது விசாரணைகள் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண நேற்று தெரிவித்தார்.



இதேவேளை இவர் 1990 களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையில் சப் இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து சேவையை விட்டு இடைநடுவே விலகி தப்பி வந்தவரென்பதற்கான ஆதாரங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பேலியாகொடை, வென்னப்புவ, கட்டுநாயக்கா, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பிரதான குற்றச் செயல்கள் காரணமாக இவருக்கெதிராக நான்கு வழக்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
நீர்கொழும்பு நகரின் பிரபல பண பரிமாற்று நிலையத்தில் கடந்த 17 ஆம் திகதி நண்பகல் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான ஐ. தே. க. வேட்பாளர் ரொயிஸ் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் கடந்த 04 தினங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் காரணமாகவே ஐ. தே. க. வேட்பாளர் திட்டமிட்டு கைதுசெய் யப்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியினை மறுத்த பொலிஸ் ஊடகப் பேச் சாளர், அவரது நீண்டகால கொள் ளைக் குற்றச்சாட்டு தொடர்பில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை அடி ப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டிருப்பதனை ஆவ ணங்களுடன் நிரூபித்தார்.
கொள்ளைச் சம்பவத்துக்கு பயன் படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு ஹெல்மட்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு தொகை பணம் ஆகியன இதுவ ரையில் கைப்பற்றப்பட்டிருப்பதாக வும் அவர் கூறினார். இது தொடர் பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடை பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது :-
குறித்த பணபரிமாற்று நிலைய த்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் அங்கு பொருத்தப்ப ட்டிருந்த சி. சி. டீ. வி. கெமராவில் பதிவாகியிருந்தது. சம்பவ தினத் தன்றே கொள்ளைக்கு பயன்படுத்தப் பட்ட இரண்டு ஹெல்மட்களையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.
இதன் மூலம் நீர்கொழும்பு பிரதேசத்தில் குறித்த ஹெல்மட் விற் பனை செய்த கடையை பொலிஸார் விசாரணை மூலம் இனங்கண்டு கொண்டனர். அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி. சி. டீ. வி. கெமராவில் அன்றைய தினம் காலை 11.35 மணிக்கு வந்த சந்தேக நபர் கையடக்க தொலைபேசியில் ஒருவருடன் உரையாடி, எத்தகைய ஹெல்மட் அவசியமெனக் கோரி பின்னர் அதை அந்தக் கடையிலி ருந்து வாங்கி சுற்று முற்றும் பார்த்த பின்னர் அணிந்துகொள்வதும் பதி வாகியுள்ளது.
சந்தேக நபரின் டீ - சேர்ட்டில் கட்டுநாயக்க ஆடைத்தொழிற்சாலை யொன்றின் பெயர் பொறிக்கப்பட்டி ருந்தது.  பொலிஸார் அந்த தொழிற்சாலை யில் விசாரணை செய்தபோது நிகழ்வொன்றில் அங்கு பணிபுரியும் 30 பேருக்கு அந்த டீ-சேர்ட் வழங் கப்பட்டிருந்ததாகவும் கெமரா வில் பதிவாகியுள்ள நபர் தமது தொழிற் சாலையில் பணிபுரிவதனையும் அவர்கள் ஊர்ஜிதம் செய்தனர். கொள்ளை இடம்பெற்ற தினத்தன்று அவர் கடமைக்கு சமுகமளித்திருக்க வில்லை.
இதன் அடிப்படையிலேயே பொலி ஸார் இவரை கைதுசெய்தனர். அவரது வாக்குமூலங்களுக்கமைய அன்றைய தினம் கொள்ளையில் நேரடியாக ஈடுபட்ட அவரது சக நண்பரையும் பொலிஸார் கைது செய்தனர். இந்த நண்பர் ஐ. தே. க. வேட்பாளர் ரொயிஸ் பெர்னாண் டோவின் சாரதியாவார்.  மேலும் சம்பவத்தில் கொள்ளை யடிக்கப்பட்ட ஒரு கோடியே 47 இலட்சம் ரூபாவில் ஒரு தொகை யான ஒரு இலட்சத்து 83 ஆயிரம் ரூபா ரொயிஸ் பெர்னாண்டோ விடமிருந்து மீட்கப்பட்டிருப்பதாக வும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் ரொயிஸ் பெர்னாண்டோ 72 மணித்தியால தடுப்புக்காவலின் கீழ் விசாரணைக்குட் படுத்தப்பட்டு வருகின்றார். அவரிடமிருந்து மீட்கப் பட்ட பணம் பணப்பரிமாற்ற நிலை யத்திலிருந்து கொள்ளையடிக்க ப்பட்டதென்பது உறுதியாகியுள்ள போதிலும் இதனுடன் சம்பந்தப் பட்ட ஏனைய சந்தேகநபர்களை கைதுசெய்யும் வரையில் பாதுகாப் புக் கருதி அதற்கான சான்றுகளை வெளியிட முடியாதுள்ளதெனவும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
ஜயவீரஆரச்சிகே எலோசியஸ் ரொயிஸ் பெர்னாண்டோ என்னும் ஐ. தே. க. வேட்பாளர் 1991 ஆம் ஆண்டில் பேலியாகொடையில் 4 இலட்சத்து 44 ஆயிரம் ரூபா பெறு மதியான பணம் மற்றும் நகை கொள்ளை, 1993 இல் வென்னப்புவ பிரதேசத்தில் 38 ஆயிரத்து 300 ரூபா பணம் கொள்ளை 2012 இல் கட்டு நாயக்க பண பரிமாற்ற நிலைய த்தில் கொள்ளை மற்றும் வெளி நாட்டுக்கு ஆட்களை அனுப்புவதா கக் கூறி 20 இலட்சம் ரூபா பண மோசடி ஆகியவற்றுடன் தொடர்பு பட்டிருப்பதுடன், இவற்றுக்கான வழக்குகள் தொடர்ந்தும் முன்னெடு க்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.