பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2014

அழகிரியை சந்திக்கிறார் ஸ்டாலின்
திமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 9ம் தேதி மதுரை செல்கிறார்.  அன்றைய தினம் மதுரையில் மு.க.அழகிரி வீட்டிற்கு செல்கிறார் ஸ்டாலின்.



அழகிரியை நேரில் சந்திக்கும் ஸ்டாலின்,  ‘’திருச்சியில் நடக்கும் திமுக மாநில மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்’’ என்ற முறைப்படியாக அழைக்கிறார். 
பல்வேறு பரபரப்பான சம்பவங்களுக்கிடையே நடைபெறப்போகும் அழகிரி -ஸ்டாலின் சந்திப்பை திமுகவினர் ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு,  திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டது ரத்து செய்யப்படும் என்றும் கூறப் படுகிறது.