பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2014

குற்ற புலனாய்வு அதிகாரி ஒருவர் இன்று சடலமாக மீட்பு-தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் 
மேல் மாகாணத்தில் குற்றபுலனாய்வு பிரிவு உயர் அதிகாரியான எம்.சமரகோன் என்பவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடகம பகுதியில் குறித்த குற்ற புலனாய்வு அதிகாரி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துருகிரிய பிரதேசத்தில் கொடகம-ஹோமாகம எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்னாலுள்ள வயல் வெளியிலிருந்து குற்றபுலனாய்வு பிரிவு உயர் அதிகாரியான எம்.சமரகோன் என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவருடைய அலுவலக துப்பாக்கி சடலத்தின் காலுக்கு அடியில் கிடந்ததாகவும், அவருடைய தலையிலேயே துப்பாக்கி காயம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் வந்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் சடலத்திலிருந்து 200 மீற்றர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தலைக்கவசம் (ஹெல்மட்) உடைந்திருந்ததுடன் வெற்றிலைக்கூறு மற்றும் ஞாயிறு பத்திரிகை அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.