பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2014

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: வெள்ளி பொருட்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெள்ளி பொருட்கள் குறித்து வரும் 18ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக லஞ்ச ஒழிப்பு
காவல்துறைக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரிடம் இருந்து 1,116 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஜெயலலிதாவின் சட்ட ஆலோசகர் பாஸ்கரன் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த பொருட்களை எடுத்துச் சென்றார். அந்த பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க பாஸ்கரனுக்கு உத்தரவிட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாஸ்கரன் உயிரிழந்துவிட்ட நிலையில் வெள்ளிப் பொருட்களை ஒப்படைக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுவது ஏற்புடையது அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. 
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞரின் பதில் மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாஸ்கரன் இறந்துவிட்ட நிலையில் அவர் கொண்டுசென்ற வெள்ளிப் பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 
பவானி சிங்கின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பாஸ்கரனால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் நிலை குறித்து விசாரித்து வரும் 18ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.