பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2014

இரண்டாவது நாளாக தேமுதிக நேர்காணல்
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்த கட்சியினரிடம் சென்னையில் நேர்காணல் நடத்துகிறது தேமுதிக தலைமை. கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை
அலுவலகத்தில் நேர்காணல் நடத்துகிறார் கட்சித் தலைவர் விஜயகாந்த். 

09.02.2014 ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை தொகுதியைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. 
10.02.2014 திங்கள்கிழமை நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருச்சி, பெரம்பலூர் தொகுதிக்கும்,
11ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை தொகுதிக்கும்,
12ஆம் தேதி வேலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி தொகுதிக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.