பக்கங்கள்

பக்கங்கள்

14 பிப்., 2014

போலீஸ் பாதுகாப்புடன் சென்ற நடிகை மோனிகா! பாலுமகேந்திரா உடலை பார்த்து கதறி அழுத காட்சி! 
திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் 14.02.2014 வெள்ளிக்கிழமை போரூரில் அடக்கம் செய்யப்பட்டது. 


மரணம் அடைந்த பாலுமகேந்திராவுக்கு அகிலா என்ற மனைவியும், சங்கி மகேந்திரா என்ற மகனும் உள்ளனர். இடையில் நடிகை ஷோபாவை காதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஷோபா தற்கொலை செய்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு நடிகை மவுனிகாவை மூன்றாவதாக திருமணம் செய்தார். 
பாலுமகேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், அவரை காண சென்றபோது என்னை சிலர் அனுமதிக்கவில்லை என்று மவுனிகா குற்றம் சாட்டியிருந்தார். மேலும்,  பாலுமகேந்திரா என் கணவர். கடந்த 1985-ம் ஆண்டு முதல் அவர் என்னுடன் தொடர்பு வைத்திருந்தார். 14 வருடங்களுக்கு முன்பு (2000ம் ஆண்டில்) நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். 
அன்று முதல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவர் இறந்த தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். ஆனால் அவர் உடலை பார்க்க என்னை சிலர் அனுமதிக்கவில்லை. பொதுவாக எல்லா 2வது மனைவிகளுக்கும் நடக்கும் கொடுமைதான் இது என்றாலும், என்னால் இந்த கொடுமையை ஜீரணிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார், 
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை போலீசார் பாதுகாப்புடன் பாலுமகேந்திரா உடலை பார்க்க வந்த மோனிகா, அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.