பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2014

பாஜக மாநாடு : வைகோ வாழ்த்து
சென்னையில் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக மாநாடு இன்று நடக்கிறது. மாநாடு வெற்றி பெற ம.தி.மு.க., வின் சார்பில் வாழ்த்துவதாக வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாடெங்கும்
ஆதரவு அலை எழுந்துள்ளது.


லோக்சபா தேர்தலில் பா.ஜ., உடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்றும், தே.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, கடந்த 4-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ம.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பங்கேற்கும் ம.தி.மு.க. தொண்டர்கள், சாலைகளில் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.