பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2014

ஓய்வு பெற்ற பின் சொந்த வீட்டிற்கு திரும்பியுள்ளேன்:
 பண்ருட்டி ராமச்சத்திரன்

 தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில்  இணைந்தார்.



இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், ’’எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டால் சொந்த வீட்டிற்கு தான் திரும்பிப் போவார்கள். நானும் ஓய்வு பெற்றுவிட்டேன்.
எனது சொந்த வீடு தாய்வீடு அதிமுகதான். நானும் ஓய்வு பெற்ற பின் சொந்த வீட்டிற்கு திரும்பியுள்ளேன். அ.தி.மு.க.,வில் இணைந்துள்ள இந்த தருணம் சொந்த வீட்டிற்கு வந்துவிட்டது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல்வர் ஜெயலலிதா தன் கையால் எனக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி யுள்ளார். வரும் மக்களவை தேர்தலில் அ,தி.மு.க.,வின் வெற்றிக்காக பாடுபடுவேன்