பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2014

திருச்சி விமான நிலைய கழிவறையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது
திருச்சி விமான நிலைய கழிவறையில் ஒரு பார்சல் கிடந்தது. சந்தேகம் அடைந்த ஊழியர்கள்
சுங்க இலாகா அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் தங்க பிஸ்கட்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை சோதித்ததில் 3 கிலோ 200 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என கூறப்படுகிறது. 
இரவில் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த யாராவது ஒரு நபர் தான் இதனை விட்டு சென்றிருப்பார்கள் என்று சந்தேகம் ஏற்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகள் கூறினர்.
எனவே அந்த விமானத்தில் வந்தவர்களின் பெயர் விபரங்களை சேகரித்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.