பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2014


இலங்கைக்கு சார்பான நாடுகளால் அமெரிக்காவுக்கு அச்சம்
இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் சில நாடுகள் பிரேரணையை முன்வைக்கவுள்ளமையை அடுத்து அமெரிக்கா தமது யோசனை தொடர்பில் மீள்பரிசீலனையை மேற்கொண்டுள்ளது.
இந்த தகவலை இலங்கையின் அரசாங்க சார்பு செய்திதாளான டெய்லி நியூஸ் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் பெற்றுள்ள சக்திமிக்க நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளன.
ரஷ்யா, சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஈரான் உட்பட்ட பல நாடுகள் இதில் அடங்குகின்றன.
இந்தநிலையில் அமெரிக்கா ஜெனீவாவில் சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையை அமெரிக்க காங்கிரஸ் தற்போது ஆராய்ந்து வருவதாக டெய்லி நியூஸ் குறிப்பிட்டுள்ளது