பக்கங்கள்

பக்கங்கள்

14 பிப்., 2014



டெல்லியில் விஜயகாந்த்: பிரதமரை சந்திக்கிறார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச இருக்கிறார். 
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி எம்எல்ஏக்கள் 21 பேருடன் வியாழக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில்
சந்திதுப் பேச உள்ளார். முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியையும் அவர் சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பிரதமருடனான சந்திப்பு குறித்து சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், டெல்லியில் தெரிவிப்பதாக கூறினார்.