பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2014

ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து பெற நடவடிக்கை
எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து பெறும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தினால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை சுதந்திர தினமான இன்று முதற்கட்டமாக வெல்லம்பிட்டியவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒரு லட்சம் கையெழுத்து பெற்றுவுடன் அதன் பிரதியை ஜெனிவா ஐநா மனிதஉரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான  செய்திக் குறிப்பு  இலங்கையின் அரச ஊடகமான நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டது.