பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2014

திரையிடப்பட்ட பஸ்களுக்குள் காதல் ஜோடிகள்! சாரதி, நடத்துனர் கைது
ஜன்னல் கண்ணாடிகளுக்கு திரையிடப்பட்ட பஸ்வண்டிகளை பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இளம் காதலர்களுக்கும் காதல் சல்லாபம் புரிய வசதியாக வாடகைக்கு விடும் பஸ்வண்டியின் சாரதி, நடத்துனரை கைது செய்த தம்புள்ள பொலிஸார் இரண்டு காதல் ஜோடிகளையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது தனது போக்குவரத்து சேவைக்கான நேரம் வரும் வரையில் பஸ்ஸின் கதவுகள் மூடப்பட்டு கண்ணாடிகளுக்கு திரைச்சீலை போடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த பஸ் வண்டி ஒன்றினை பொலிஸார் சோதனையிட்ட போதே அதற்குள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் இரு மாணவிகளும் இரு மாணவர்களும் சுதந்திரமாக சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் பஸ்வண்டிக்கு வெளியில் நின்ற பஸ் சாரதியையும் நடத்துனரையும் பொலிஸார் கைது செய்தனர்.
பஸ்களுக்குள் சல்லாப நடவடிக்கைக்கு கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.