பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2014

இலங்கையர்களை கொண்ட கொள்ளைக் குழு இத்தாலியில் கைது
எட்டு இலங்கையர்களை கொண்ட கொள்ளையில் ஈடுபடும் குழுவை இத்தாலி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.இத்தாலியின் சிசிலியே மெஷினா நகரின் கெரப்னேரி பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
சிசிலியே நகர கேந்திர நிலையமாக கொண்டு இந்த கொள்ளைக்குழு இயங்கி வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளையிடப் பயன்படுத்தப்பட்ட கத்தி, இரும்பு கம்பி என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு இந்த கொள்ளைக் குழுவினர் மெஷினா நகரில் இலங்கையர் ஒருவரை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டதாக முதல் முறையாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.