பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2014





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் தீவுப் பகுதிக்கு விஐயம் செய்துள்ளனர்.
கடந்த 2001ம் ஆண்டு தீவுப் பகுதிக்கு விஐயம் மேற்கொண்ட கூட்டமைப்பினருக்கு நடந்த சம்பவத்தை, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்த விஐயத்தின் போது உடன் வந்திருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்.
இவ்விஜயத்தின்போது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஐதீபன், சாவகச்சேரி நகர சபையின்
உறுப்பினர் எஸ்.கிசோர், தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பா.தர்சானந்த் உள்ளிட்ட குழுவினர், தீவுப் பகுதியில் ஊர்காவற்துறை, வேலணை மற்றும் புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களிற்கு விஐயம் மேற்கொண்டிருந்தனர்.
இப்பகுதிகளில் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பிலும் மக்களுடைய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.