பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2014

கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் இடங்களை அடையாளம் கண்டு தோண்டுங்கள் - நல்லாட்சிக்கான மக்கள் கூட்டமைப்பு 
கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு அவற்றைத் தோண்டுவதோடு கடத்தல், கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்க
ளை அடையாளங்கண்டு விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.
இவ்வாறு நல்லாட்சிக்கான மக்கள் கூட்டமைப்பின் தலைமையிலான கூட்டமைப்பு, காணாமற் போனவர்கள் தொடர்பான விபரங்களைப் பதிவு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினரிடம் கோரியுள்ளது. 
 
அதனை நிறைவேற்றுவதாக ஆணைக் குழுவின் செயலாளர் கூறியதாக நல்லாட்சிக்கான மக்கள் கூட்டமைப்பின் தலைமையிலான கூட்டமைப்பைச் சேர்ந்த நஜா மொஹமட் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவித்ததாவது;
அந்த ஆணைக்குழுவின் அலு வலகத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் எமது கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான மரணச் சடங்குகளை உரிய சமய ஆசாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளல் வேண்டும். 
 
கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்படுதல் வேண்டும் என்று நாம் கோரியுள்ளோம்.
 
இதனை எற்றுக் கொண்ட ஆணைக்குழுவின் செயலாளர், பொதுவாக ஆணைக்குழுக்கள் தொடர்பில் மக்களிடம் நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகிறது. எனினும் தமது ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தை முனைப்புடன்  செயற்படுத்தி வருகிறது. 
 
எனவே சமூக செயற்பாட்டாளர்கள் ஆணைக்குழுவுடன் சேர்ந்து செயற்படல் வேண்டும். அதன் போதே பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார் என்று கூறினார்.