பக்கங்கள்

பக்கங்கள்

14 பிப்., 2014


வனயீர்ப்புப் போராட்டத்திற்கு த.தே.கூட்டமைப்பு மற்றும் த.தே.ம.முன்னணி ஆதரவு
காணாமல்போனவர்கள், அரசியல் கைதிகள் மற்றும் மீனவர் பிரச்சினை ஆகியவற்றை முன்னிறுத்தி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
நாளை காலை 10 மணிக்கு யாழ்.முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
யாழ்.குடாநாட்டில் கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் நடைபெறுவதனை அரசாங்கம் முழுமையாக விரும்பாத நிலையில் மேற்படி போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
காணாமல் போனவர்கள் தொடர்பாக பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், நில அபகரிப்பை தடுத்து நிறுத்துதல், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.