பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2014

யாழில் வாள்களுடன் வந்த இராணுவத்தினர் கைது
யாழ்.தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வாள்கள் மற்றும் இராணுவச் சீருடையுடன் இருந்த 4 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், அவர்களிடமிருந்து 4 வாள்களும் ஒரு தொகுதி இராணுவச் சீருடையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஆலய நிர்வாகத்தினரின் அறிவுறுத்தலையும் மீறி அவர்கள் மடத்தில் இருந்ததாகவும், தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று அவர்களைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு பேரும் தற்போது பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவர்களுக்கும் யாழில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.