பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2014

இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது: ஜெயலலிதா கண்டனம்
தமிழக சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய அரசு புறக்கணித்து வருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார்தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை கடுமையாக சாடினார்.
குறிப்பாக தமிழக சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய அரசு புறக்கணித்து வருவதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் கூறினார்.
மேலும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் மீனவர்கள் விடுதலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு மறுபுறம் மீனவர்களை கைது செய்து இலங்கை அரசு சிறையில் அடைத்து வருவதையும் அவர் கண்டித்து பேசினார்.