பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2014

பலத்த காற்றுடன் மழை பொழியும்: வானிலை ஆய்வு மையம்

கனடாவின் ரொறன்ரோவில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரொறன்ரோ மாகாணத்தின் பெரும்பகுதிகளில் இன்றிரவு முதல் நாளை காலை வரை பலத்த மழை பொழிவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் Niagara, Hamilton, Halton, Peel, York and Durham ஆகிய பகுதிகளிலும் கணிசமான அளவு மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
அப்போது வெப்பநிலை உயர்வடையும் என்பதால், பனிப்படிவுகள் உருகி வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரொறன்ரோவில் உறைபனிக்கட்டிகள் விழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.