பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2014

மசிடோனியாவில் சிறுவர் பாலியல் குற்றவாளிக்கு ஆண்மை நீக்க தண்டனை

தொடர்ச்சியான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரசாயன ஆண்மை நீக்க தண்டனை வழங்கும் சட்டமூலம் மசிடோனிய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் மிக
கருணை கொண்டது என்று நாட்டின் முன்னணி சிறுவர் பாதுகாப்பு குழுக்கள் முறையிட்டுள்ளன. இந்த ஆண்மை நீக்க மருந்து மூலம் காம வேட்கை மற்றும் பாலியல் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படும் என்று மசிடோனிய சமூகக் கொள்கை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டமூலத்திற்கு அமைய குற்றம் சுமத்தப்படுபவருக்கு 15 முதல் 40 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை அல்லது தண்டனையை குறைக்க ஆண்மை நீக்க சிகிச்சையை பெற நிர்ப்பந்திக்கப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யா, டென்மார்க் மற்றும் போலந்து நாடுகளில் ஆண்மை நீக்க தண்டனை அமுலில் உள்ளது.