பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2014

செ.அரங்கநாயகம் திமுகவில் இருந்து விலகினார்
தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தவர், செ.அரங்கநாயகம்.



அதனை தொடர்ந்து, ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வி துறை அமைச்சராக இருந்த இவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி கடந்த 4-9-2006 அன்று தி.மு.க.தலைவர் கலைஞர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து இரு முறை, கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் இருந்து இரு முறை என 4 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ள அரங்கநாயகம் தி.மு.க.வை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.