பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2014

ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட ஊழல் அரசியல் வாதிகள் பட்டியலில் நரேந்திர மோடி சோனியாகாந்தி
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட ஊழல் அரசியல் வாதிகள் பட்டியலில் சனிக்கிழமை இன்று நரேந்திர மோடி மற்றும் சோனியாகாந்தியின் பெயரையும் சேர்த்துள்ளது.

ஊழல் புரிந்தவர்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதி பெற்றுத் தந்து அவர்களைப் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளதற்காக மோடியின் பெயரையும் ஊழல்வாதிகள் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
தனது கட்சித் தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இவர்கள் இருவரின் பெயர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுபோன்ற அரசியலுக்கு முடிவு கட்ட முயற்சி செய்வோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறினார்.
வெறுப்பு அரசியல் என்பதனை முன்னிலைப்படுத்தும் மோடியையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நேற்று கேஜ்ரிவால் ஊழல்வாதிகள் பட்டியலை தேசிய கவுன்சில் முன் வாசித்தார்.