பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2014

மீண்டும் இராணுவத்தால் குறி வைக்கப்படும் தமிழ்ப் பெண்கள்

தமிழர் தாயகத்தில் மீண்டும் தமிழ்பெண்களை இராணுவத்தில் இணைப்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பெரும்பாலான கிராம சேவகர்
பிரிவுகளில் தமிழ் பெண்களை இராணுவத்தில் இணையுமாறு இளங்கலை இராணுவத்தினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பெரும் பரப்புரைகளை இராணுவத்தினர் மேற்கொள்கின்றனர்.
அந்த சுவரொட்டியில் கீழ் வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
01. உங்கள் சொந்த பூமியில் உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
02. இலங்கை இராணுவத்தின் மகளீர் படைப்பிரிவில் நீங்களும் இராணுவ வீரராகலாம்.
03. நீங்கள் 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
04. நல்ல உடல் கட்டு உடையவராக இருக்க வேண்டும்.
05. உயர்தரம் வரை கல்வி கற்றிருக்க வேண்டும்.
05. உணவு, தங்குமிடம், மருத்துவம், பிரயாணம் ஆகியன இலவசமாம், நெருங்கிய
குடும்பத்துக்கும் மருத்துவம் இலவசம்.
06. சம்பளம்30000/=
அதில் தொடர்புளுக்கு
தொலைபேசி இலக்கங்கள்: 0113168454, 0775457678
ஆறாவது பெண்கள் படையணி,
கொக்காவில்.
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைப்பது என்பது காலவோட்டத்தில் தமிழினச் சுத்திகரிப்பை சிங்களம் திட்டமிட்டு அரங்கேற்றுவதற்கான உபாயமாகக் கருதப்படுகின்றது. கடந்த காலங்களில் இவ்வாறு இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்களில் சிலர் இராணுவத்தினரின் பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்களை நாம் பார்க்கிறோம். இதேநேரம் இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்களை இராணுவத்தினரே திருமணம் செய்யும் சம்பவங்களையும் நாம் பார்க்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் காலவோட்டத்தில் தமிழினச் சுத்திகரிப்பை சிங்களம் இலகுவில் அரகேற்ற்றுவதற்கு அபாய சமிக்கைகளாகவே காட்சியளிக்கின்றன.
சிங்களத்தின் இறுதி யுத்தத்தினால் ஒரு இனவழிப்பின் விழிப்பில் நின்று கொண்டு, இழப்பதற்கு எதுவுமே இல்லாத நிலையில், பெரும் கொடூரங்களையும், பெரும் வலிகளையும் சுமந்த இம்மக்கள், மீண்டும் தமது இயல்பு வாழ்வை ஆரம்பிக்க முடியாத ஒரு துர்பாக்கிய நிலையைச் சிங்களம் கவர்ச்சிகரமான பரப்புரைகள் மூலம் பயன்படுத்தப் பார்க்கின்றது.
வேலைவாய்புகள் இல்லாத இம்மக்களிடையே ஆண்கள் இருக்கும் போது, தனியே பெண்களைக் குறிவைத்து இராணுவத்தில் இணைப்பதன் சூத்திரம் தான் என்ன? யுத்தம் முடிவுக்குள் வந்தபின்னர் இம்மக்களின் இயல்பு வாழ்வை ஆரம்பிப்பதற்கு என்னத்தைதான் தந்தார்கள்? என்னத்தைத்தான் செய்தார்கள்? எங்கு பார்த்தாலும் தமிழர் இருப்புபை அழிக்கும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள். கரையோரங்கள் எங்கும் சிங்களக் குடியேற்ங்கள். மூலை முடக்கு எஙகும் புத்தர் சிலைகள் விகாரைகள். எங்கும் இராணுவ முகாங்கள். எங்கு சென்றாலும் புலனாய்வாளர்கள் விசாரணைகள். சுருங்கக் கூறினால் தமிழர் தாயகம் எங்கும் இராணுவ மயமாகவே காணப்படுகின்றது.
சிங்களத்தின் இவ்வாறான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கள், இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள், இளைய தலைமுறையினரைக் குறிவைக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் போரின் பின்னரான தமிழின அழிப்பை சிங்கள் திட்டமிட்டு படிப்படியா அரங்கேற்றி வருகிறது என்பதையே கட்டியம் கூறி நிற்கின்றது.
  1. Army_Girls